பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு

பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு – 10,277 கிளர்க் பணியிடங்கள்;

பட்டதாரிகளுக்கு சுவையான வாய்ப்பு!

நாட்டு மக்களின் நம்பிக்கையின் மையமான பொதுத்துறை வங்கிகளில், இப்போது பெரும் பணியாளர் ஆட்சேர்ப்பு தொடங்கியுள்ளது.  இவை அனைத்தும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்தின் (IBPS) மூலம் நிரப்பப்பட உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.08.2025 தேதிக்கு இடையில் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பட்டதாரிகள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, கணினி அறிவு அவசியம் – அதாவது, கணினி சான்றிதழ்/டிப்ளமோ/படிப்பு இருக்க வேண்டும்.

வயது சலுகைகள்:

SC/ST – 5 வருடங்கள்

OBC – 3 வருடங்கள்

PWD – 10 வருடங்கள்


பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு



எந்தெந்த வங்கிகள் பங்கேற்கின்றன?

இந்த ஆண்டு பணியிடங்களை அறிவித்துள்ள முக்கிய வங்கிகள்:

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் இந்தியா

கனரா வங்கி

இந்தியன் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

யூனியன் வங்கி ஆஃப் இந்தியா

மற்றும் மற்ற பொதுத்துறை வங்கிகள்

மாநில வாரியான விண்ணப்பம்

விண்ணப்பதாரர்கள் ஒரே ஒரு மாநிலத்திற்கே விண்ணப்பிக்க முடியும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பது முக்கியம்.


பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு


தேர்வு அமைப்பு:

இந்த பணிக்கு நடைபெறும் தேர்வுகள் இரண்டு நிலைகளில் உள்ளன:

1. முதல்நிலைத் தேர்வு (Preliminary Exam):
100 கேள்விகள் – ஆங்கிலம், திறனறிதல், கணிதம்

மொத்த மதிப்பெண்கள்: 100

நேரம்: 1 மணி நேரம்

தேர்வு மாதம்: அக்டோபர் 2025

2. முதன்மைத் தேர்வு (Main Exam):
155 கேள்விகள் – ஆங்கிலம், பொது அறிவு/நிதி அறிவு, கணிதம், திறனறிதல்

மொத்த மதிப்பெண்கள்: 200

நேரம்: 2 மணி நேரம்

தேர்வு மாதம்: நவம்பர் 2025

இரண்டும் ஆன்லைன் மூலமாக நடைபெறும். தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறும்.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் இறுதி தேர்வு பட்டியலில் இடம் பெறுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பம் ஆன்லைனில் மட்டும் – 👉 https://www.ibps.in/

கடைசி தேதி: 21.08.2025

விண்ணப்பக் கட்டணம்:

பொது / OBC / EWS: ₹850

SC / ST / PWD / ExSM: ₹175

ஊதியம்:

பணியின் ஆரம்ப சம்பளம் ₹24,050 ஆகும். இது அனுபவம் மற்றும் பதவியின்படி அதிகரித்து, அதிகபட்சமாக ₹64,480 வரை சென்று சேரும்.

இந்த வேலை வாய்ப்பு, பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கான மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. வங்கித்துறையில் நிலையான வேலையும், எதிர்கால வளர்ச்சியும் விரும்புகிறவர்களுக்கு இது முயற்சி செய்யும் நேரம்!

மேலும் விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்:
🔗 https://www.ibps.in/



பொதுத் துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு

நீங்களும் உங்கள் கனவு வேலைக்காக  இன்றே  தொடங்குங்கள்

Post a Comment

Thanks for support

புதியது பழையவை