தூய்மை பணியாளர்கள் 12-ஆம் நாளாக போராட்டம்

 

தூய்மை பணியாளர்கள் 12-ஆம் நாளாக போராட்டம் 


தூய்மை பணியாளர் போராட்டம்:

 வடமாநில தொழிலாளர்கள் ஈடுபாடு வதந்தி என அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில், ரூ.276 கோடி மதிப்பிலான தூய்மைப் பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தமாக வழங்கப்பட்டதை எதிர்த்து, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கடந்த ஜூன் 16 முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இந்த போராட்டம் 12-ஆம் நாளை எட்டியுள்ளது.

தூய்மை பணியாளர்கள் 12-ஆம் நாளாக போராட்டம்


மாநகராட்சி மற்றும் தமிழக அரசு, பொதுநலம் கருதி பணிக்கு திரும்புமாறு பணியாளர்களுக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளன. பணியாளர்களின் பணி பாதுகாப்பு குறித்த உண்மையான நிலையை அறிந்து, போராட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தியும் வந்துள்ளது.

ஆனால், தூய்மை பணியாளர்கள் இந்த அழைப்பை புறக்கணித்து, போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், “எங்கள் துறை அமைச்சர் கே.என்.நேரு எங்கே? ஏன் எங்களை சந்திக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, இதுவரை போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களை நான்கு முறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், சுமார் 300 பேருக்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், அது முடிந்த பின் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, “தூய்மை பணியில் வடமாநில தொழிலாளர்களை ஈடுபடுத்துவோம்” என்றது முற்றிலும் வதந்தி. எந்த பணியாளரையும் பணி நீக்கம் செய்யவில்லை. விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்வது குறித்து முதலமைச்சர் முடிவு எடுப்பார். ஆனால் அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நாளில் நிறைவேற்ற முடியாது; கால அவகாசம் தேவை” என்று விளக்கம் அளித்தார்.

Post a Comment

Thanks for support

புதியது பழையவை