புகைப்பிடிக்காதவர்களுக்கும் புற்றுநோய் | Lung cancer

 

புகைப்பிடிக்காதவர்களுக்கும்  நுரையீரல் புற்றுநோய்

 பெங்களூரு தகவல் தொழில்நுட்ப நிபுணர், 34, மற்றும் பானிபட் ஆசிரியர், 43, புகைபிடித்தல் அல்லது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் இல்லாமல் நுரையீரல் புற்றுநோயால் கண்டறியப்பட்டனர்.

செய்தி சுருக்கம் :

    பெங்களூர் மற்றும் பானிபட், ஒரு போக்கில், இந்தியாவின் வெவ்வேறு  பகுதிகளைச் சேர்ந்த தொடர்பில்லாத இரண்டு நபர்கள் நுரையீரல் புற்றுநோயால் (cancer)  பாதிக்கப்பட்டுள்ளனர், புகைபிடித்தல் அல்லது புகையிலை பயன்படுத்துதல் போன்ற பழக்கம் எதுவும் இல்லை. பெங்களூரைச் சேர்ந்த 34 வயதான ஐ.டி நிபுணரும், பானிபாத்தைச் சேர்ந்த 43 வயதான பள்ளி ஆசிரியரும் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

       இரு நபர்களும் பாரம்பரியமான ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பவர்கள் . அவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்கள், வீட்டில் சமைத்த உணவை மட்டுமே அதிகம் விரும்பி சாப்பிட கூடியவர்கள். மேலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய புகைபிடிக்கும் பழக்கமோ அல்லது புகையிலை பயன்படுத்தும் பழக்கமோ இருந்ததில்லை. இரசாயனங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளும் அவர்கள் செய்ததில்லை. புற்றுநோய்க்குறித்து நன்கு அறிந்த மருத்துவ வல்லுநர்கள் கூறுவதாவது.

புகைப்பிடிக்காதவர்களுக்கும்  நுரையீரல் புற்றுநோய் | Lung cancer


புகையில்லாதவர்களுக்கும் புற்றுநோய் காரணங்கள்

  1. வானிலை மாசுபாடு
           உலகம் முழுவதும் அதிகமான வானிலை மாசுபாடு காரணமாக குறிப்பாக நகரங்களில் வாழ்பவர்கள் தான் அதிகளவு பாதிக்க படுகிறார்கள்.  நுரையீரல் புற்றுநோயின் ஒரு முக்கிய காரணமாக வானிலை மாசுபாடு உள்ளது. ஆக்சினில் உள்ள மாசுபடுகள், தொழிற்சாலை கழிவுகள், சூழல் மாசுபாடு நிறைந்த காற்று இவைகளை நாம் அதிகம் சுவாசிப்பதால் நுரையீரலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்த முடியும். இந்தியா போன்ற சில நாடுகளில், இந்தப் பிரச்சனை அதிகமாக உள்ளது.

    ரேடான் வாயு (Radon gas) – இயற்கை கதிரியக்கம

               நிலத்தில் உள்ள யூரேனியம் சிதைவால் உருவாகும் கதிரியக்க வாயு.வீட்டினுள் கூடி, நீண்ட நேரம் சுவாசிப்பதால் DNA சேதம் ஏற்படலாம்.இது புகையில்லாதவர்களுக்கு நுரையீரல் புற்றுநோயின் முதன்மை காரணங்களில் ஒன்று.

    புகைப்பிடிக்காதவர்களுக்கும்  நுரையீரல் புற்றுநோய் | Lung cancer

  2. இரண்டாம் நிலை புகைபிடிப்பு (Secondhand smoke)

             நண்பர்கள், உறவினர்கள் அல்லது கடைகளுக்கு செல்லும்போது மற்றவர்கள் புகைபிடிக்கும் சிகரெட் புகையை நீண்ட காலமாக தொடர்ச்சியாக சுவாசிப்பது. இன்று உள்ள காலகட்டங்களில் சிகரெட் புகைப்பவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது குறிப்பாக வீட்டிலிலோ  அல்லது வேலை செய்யும் இடங்களில் நாம் புகை பழக்கம் உடையவர்  இல்லை என்றாலும் மற்றவர்கள் புகைக்கும்போது அவர்கள் விடக்கூடிய புகையை நாம் தொடர்ச்சியாக சுவாசிக்கும் போது நுரையீரல் புற்றுநோய் வருவதற்கு வழிவகுக்கும் 

    புகைப்பிடிக்காதவர்களுக்கும்  நுரையீரல் புற்றுநோய் | Lung cancer

  3. மரபணுக்கள் (Genes) 

            மரபணுக்கள் என்பது நம்முடைய உடலில் உள்ள செல்களின் செயல்பாட்டை, வளர்ச்சி மற்றும் பராமரிப்பை கட்டுப்படுத்தும் உத்தரவுகளைக் கொண்ட DNA  துண்டுகள் ஆகும். ஒவ்வொரு மரபணுவும் ஒரு குறிப்பிட்ட புரதம் (Protein) உருவாக தேவையான அறிவுறையை (Instructions) கொண்டிருக்கும். மனித உடலில் சுமார் 20,000 – 25,000 மரபணுக்கள் உள்ளன.

           சில மரபணுக்களில் மாற்றங்கள் (Mutations) ஏற்பட்டால், செல்கள் கட்டுப்பாடின்றி அதிகமாக வளர அல்லது வித்தியாசமான முறையில் செயல்படத் தொடங்கலாம். இதுவே புற்றுநோய் (Cancer) போன்ற பல்வேறு நோய்களின் அடிப்படை காரணமாக இருக்கிறது.

    முடிவுரை 

         இன்னும் பல காரங்கள் இருக்கின்றன.. அவைகளில் நாம் உண்ணும் உணவு முறையும் அடங்கும். ஒவ்வொருநாளும் நாம் நம்மை காத்து நடத்தல் நல்லது.


Post a Comment

Thanks for support

புதியது பழையவை